9 ஆகஸ்ட், 2010

ஆண்டு தோறும் காத்திருக்கிறேன்

ஒவ்வொரு ஆண்டும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நான் சுமந்துக்கொண்டு இருக்கும்
சுமையை இரக்க
உனக்காய் நான் காத்திருக்கிறேன்

பசி என்றால் என்ன
தெரியாதிருந்த எனக்கு
பசியை உணரவைக்கிறாய்
ஏழையின் துயரை
ஆழமாய் அறியவைக்கிறாய்

யாருக்கும் எதையும்
விட்டுக்கொடுக்காத என்னை
தியாகம் செய்ய
கற்றுக் கொடுக்கிறாய்
உணவை விட்டுக்கொடுத்தேன்
தண்ணீர் விட்டுக்கொடுத்தேன்
மெல்ல மெல்ல விட்டுக்கொடுக்க
ஞானத்தை பெற்றுக்கொடுக்கிறாய்

பேராசை தீயில்
உழண்ட மனதை
பெரும் போராட்டத்தின் பின்பும்
கட்டுப்படுத்த தவறி விழித்தப்பொழுது
என் மனத்திற்க்கு கடிவாளமிட்டு
என் மனித தன்மையை
திருப்பிக் கொடுக்கிறாய்

என் ஜம்புலன்களின்
வழியே மாசுபட்ட
என் உள்ளத்தை
திரைகளிட்டு
மறைத்துவைக்கிறாய்
பின்னே
அவன் கருணை கொண்டே
என் உள்ளத்தை
கழுவி சுத்தம் செய்கிறாய்

செல்வமும்
வறுமையும்
இருகோடுளாக
இணையாதிருக்க
ஜகாத் என்னும்
பாலத்தால்
இரண்டையும்
இணைத்துவைக்கிறாய்

வறுமையற்ற
சமுகம் காண
புதுப்புரட்சி செய்கிறாய்
கருணை ஊற்றை
தூர் எடுத்து
மனித மனத்தில்
மறுமலர்ச்சி காண்கிறாய்

மனத்தில் உண்டாகும்
வாதம் நீங்க
வேதம் தந்தாய்
மனிதனாய் வாழ
பயிற்ச்சி செய்ய
ஆண்டில் ஒரு முறை
மாதம் தந்தாய்
இறைவா எங்களுக்கு
ரமலான் மாதம் தந்தாய்


ரமலானே வருக
பாவம் கரைந்திட
அருள் மாரி
பொழிக!

5 ஆகஸ்ட், 2010

ஹைக்கூ


சிலைட்
--------
என்
விரல் வரையும்
ஓவியத்திற்காக
காத்து கிடக்கறது
அவள்
கருப்பு தேகம்
------------------------------------------------

உனக்காக
------------
என்னுடைய
உலகம்
விடிவதும்
முடிவதும்
உனக்காக
-----------------------------------------------

சோறு
--------
பணக்காரன்
நாக்கு ருசிக்கு
ஏழைகளின்
வயிற்று பசிக்கு

-----------------------------------------------

மன்னிப்பு
----------
மனிதத்தின்
பிரதிபளிப்பு
மன்னிப்பு

-----------------------------------------------

இரக்கம்
---------
உள்ளத்தின்
இருக்கம்
அறுக்கும்
இரக்கம்

------------------------------------------------

பொறுமை
-----------
உணர்ச்சிகளின்
உச்சத்தில்
நிதானம்
அதில்தான்
உண்மை பொறுமையின்
பெறுமை

-------------------------------------------------

போர்
-------
மனித சடலங்கள் மேல்
மகுடம் சூட
மனிதநேயமே இல்லாத
மனித வேட்டை

--------------------------------------------------

பரிசல்
--------
தண்ணீரில்
தவழும்
தாரகை

--------------------------------------------------

புல்லாங்குழல்
--------------

காற்று
தீண்டினால்
கவிதைகள்
பிரசவிப்பாள்
இந்த
காட்டு மூங்கில்

----------------------------------------------

வயல்வெளி
------------
பூமி தாய்
உடுத்திய
பச்சை புடவை

---------------------------------------------

வசந்த காலம்
--------------
வானவில் போல்
நீ
வந்து மறைய
வாசலில் தவம்
கிடந்த நாட்கள்
என்
வசந்த காலம்

---------------------------------------------------

பேருந்து
---------
சாலையில்
ஒரு
சமத்துவபுரம்

------------------------------------------------------

பேருந்து
---------
ஒரு இயந்தரத்தின்
ஓட்டத்துக்குள்ளே
பல இதயங்களின்
ஓட்டம்

-----------------------------------------------------

அடை மழை
---------------
பூமி மீது
மேகத்தின்
தீராத
மோகம்

------------------------------------------------------

சுடர்
-------
திரியில் பூத்த
திவ்ய மலர்
தீ சுடர்

--------------------------------------------------------

பயணம்
---------
வலியோடு துடங்கி
வழிகள் பல சென்று
வலிகள் பல கண்டு
வலியோடு முடிகிறது
வாழ்க்கை பயணம்

------------------------------------------

சிறுவர்கள்
-----------
மலர்ந்தால்
இறைவனுக்கா
இரங்களுக்கா
தெரியாத
மலர்
மொட்டுக்கள்.....

--------------------------------------------

விறகு வெட்டி
---------------
வறுமை கரையான்
அரித்த மரம்

---------------------------------------------

சுற்றி திரிந்த நாட்கள்
-------------------------
மலரில்
தேன் தேடிய
பட்டாம்பூச்சி நாட்கள்......

-----------------------------------------------

காந்தி சாலை
--------------
சாலை நடுவே
பொக்கை வாய் சிரிப்பு
பெயரை பார்த்தால்
காந்தி சாலை

4 ஆகஸ்ட், 2010

என்னுடைய நாட்கள்

கடினத்தோடு
கிழித்து எறியப்படுகிறது
என்னுடைய நாட்கள்

முகமூடி அணிந்த
மனிதர்களின் போலி சிரிப்புகளையும்
பின்னால் பேசும் புறங்களையும்
கடக்கின்ற மணித் துளிகளில்
நாகரிகப் போர்வையில்
சுயம் போட்டுக்கொள்ளுகின்றன
பொய் முகமூடிகளை

சுயநல மனிதர்களின்
நாவின் அசைவுகள்
சத்தியத்தை சாகடித்த வசவுகள்
இதில் நாட்கள் நகர நகர
தோய்க்கப்படுகிறது மனம்
நிதம் நிதம்
தேர்ச்சியடைகிறது ஞானம்
தினம் தினம்

தேவையின் நிற்பந்தங்களும்
தேடலின் தவிப்புகளும்
விலங்குகளாக
பின்னிப் பினைந்து கிடக்க
நாட்கள் பயணிக்கின்றன
வலுவான நாளைய
எதிர்பார்ப்புடன்

புதிய புதிர்களுடன்
தினம் தினம்
பூக்கிறது
புதிய நாள் ஒன்று
விடை தேடியே
விழுகின்ற
அன்றையப் பொழுதுகள்

மயான அமைதியுடன்
கரும் இரவுகளில்
சொல்லப்படாத மௌனத்துடன்
வானத்தில் அந்த நிலாவும்
சுகமான நினைவுகளின்
சுமைகளில்
என் மனமும்

விடியலின்
தொடக்கத்துக்காக
இரவின் முடிவு காத்திருக்கிறது
நானும் காத்திருக்கிறேன்
கடினத்துடன் கிழித்து எறிய
அடுத்த நாளை……

27 ஜூலை, 2010

மௌன திரைகள்

மௌன திரைகள்
மனதை மறைத்தாலும்
விழியின் ஜன்னலில்
கசிகிறது காதல்
------------------------------
ஊடல் நாடகங்கள்
ஒத்திகைப் பார்த்தாலும்
அரங்கேறுவது என்னவோ
கூடலின் காட்சிகள்
--------------------------------
உன் மனம்
அங்கிகரித்தப் பின்
தூக்கியெரிப்படுகிறது
என் காதல்
பெண்மைக்கே உரிய
பொய்யான நிராகரிப்போடு
-----------------------------------
உன் நிராகரிப்புகள்
வரவேற்கப்படுகின்றன
உன் இதயத்தை
நான் ஆகிரமிப்பு
செய்யும்வரை

21 ஜூலை, 2010

புன்னகை

மலரில்
ஒரு
மின்னல் கூத்து
உன் மெல்லிய
புன்னகை

இதயத்தில் சில கல்லறைகள்

அன்பை தந்தேன்
அவமதிப்புகள் பரிசளிக்கப்பட்டது
போதும் என்று
ஒதுங்கி நின்றேன்
சில குரோதங்கள்
அவதூறுகளாக
உரசிப்பார்த்தன
 

உள்ளமும்
உணர்வுகளும்
சில சுயநலங்களுக்கு
இறையாவதால்
சத்தமில்லாமல்
கட்டப்படுகிறது
இதயத்தில்
சில கல்லறைகள்

14 ஜூலை, 2010

என் வானிலே

என் இலக்கிய வானில்
சூரியனும் இல்லை
சந்திரனும் இல்லை
நீ மட்டும் இருக்கிறாய்
நிரந்தரமாய்

இங்கே
பகல் என்றும்
இரவு என்றும்
சொல்லுவதற்கில்லை
அம்மாவாசை
பௌர்ணமிக்கு
வழியுமில்லை
ஏன்னென்றால் நீ
தோன்றவும் இல்லை
மறையவும் இல்லை
தேயவும்மில்லை
வளரவும்மில்லை

துருவ நட்சத்திரங்களாய்
உன் இரு கண்கள்
பயணிக்கிறது
என் மொழி
உன் விழி
காட்டும் வழி

உன் மேலான
மோகங்கள்
மேகங்களாய்
திரண்டுயிருக்க
அவை மோதிக்கொள்ளும்
இடமெல்லாம்
இடியுடன்
பெய்கிறது
கவிதை மழை

8 ஜூலை, 2010

சில கிறுக்கல்கள்

நனைகிறது இதயம்
உன் காதல் மழையில்
சட்டென விரி
உன்
தாவணி குடையை….

---------------------------

புல்லின் மடியில்
பனியின் தூக்கம்
உன் பூ மடியில்
என் சிற்று
க்கம்

------------------------------

உன் காதல்
சாம்ராஜ்ஜியத்திடம்
தோற்றது
என் காதல்தேசம்

------------------------------

என் உள்ள குளத்தில்
பார்வை கல்லெரிந்தாய்
சலனப்பட்டது நினைவுகள்

------------------------------

உன்
இதயத்தில்
என் புரட்சி
நம் காதலின்
மறுமலர்ச்சி

-------------------------------

ஆயிரம் சாவிகள்
என்னிடம் உண்டு
எதை
கொண்டு
திறக்க உன்
இதய பூட்டை

--------------------------------

ஆசையை விதைத்தேன்
காதல் அறும்பியது
காதலை விதைத்தேன்
கண்ணீர் அருவியானது

---------------------------------

நானும் எமன்தான்
உன் வெட்கத்திற்க்கு

--------------------------------

இருக்கிறதா அகராதி
உன் விழியின் மொழியை
கற்றுக்கொள்ள..

18 ஜூன், 2010

இரவு நிலவு

இருட்டு வானம்
உன்
கற்றை கூந்தல்
ஒற்றை நிலா
அதில்
வெள்ளை ரோஜா

சுழற்ச்சி

இந்த
பூமியின்
சுழற்ச்சி
அந்த
சூரியன்
வருவதும்
மறைவதும்

உன்
நினைவுகளின்
சுழற்ச்சி
நான்
அழுவதும்
சிரிப்பதும்

14 ஜூன், 2010

என் வாழ்த்துக்கள்

கொதிக்கும்
நினைவு கங்குகளில்
மழையாய் பொழியட்டும்
என் வாழ்த்துக்கள்
உன் மனத்தில்
நீர் பூத்த சாம்பலில் இருந்து
புதிதாய் பூக்கட்டும்
மகிழ்ச்சி பூக்கள்
வானவில் வாழ்க்கையில்
தொடரட்டும் வசந்தங்கள்
உதட்டின் செடிகளிலே
பூக்கட்டும் புன்னகைகள்......

3 ஜூன், 2010

உன் நளினம்

சில வார்த்தைகளில்
அடங்குவதாய்யில்லை
உன் நளினம்

எத்தனை முறை
இதயம் துடித்திருக்கும்
உன் இமைகளின்
படபடப்புகள் கண்டு
கணக்கிட முடியாமல்
தொக்கி நிற்கிறேன்

உன் விழியின்
மொழி கொண்டு
கவிதை வரைந்திட
எத்தணித்து
உன் விழிகளோடு
பேசும் முயற்ச்சியெல்லாம்
ஒரு மௌனத்தில்
முற்றுப்புள்ளியாய் முடிகிறது

உன் உதடுகள் பேசும்
சிலேடை பேச்சுக்களில்
ஒரு காவியம் படைக்க முயன்று
படைத்தலை விட்டு
ரசிகனாய் நிற்க்கிறேன்

உன்னுடன் சாலையில்
நடக்கும் பொழுதெல்லாம்
நீ முன் செல்ல
பின் தொடருவேன்
உன் நடையின்
நளினங்களில்
நாட்டியம் கண்டவனாய்

உன் சின்ன குறும்புகள்
செல்ல சினுங்கள்கள்
அவை அத்தனையிலும்
ஒரு கவிதை விற்றுயிருந்தது
ஒரு மெல்லிய நளினத்துடன்……

30 மே, 2010

நானம்

உன் வெட்கத்தோடு
விளையாட நினைத்து
முத்தம்மிட்டேன்
உன் கண்ணங்களை

உதடுகள் விடைப்பெற்றபோது
நானம் விடை சொன்னது
திராட்சை ரச கோப்பைகளாய்
உன் கண்ணங்கள்………

26 மே, 2010

மௌன தருணங்கள்

அந்த மௌன
தருணங்களை
அசைபோடுகிறது மனம்

தாகம் கொண்ட
நெஞ்சோடு
விழிகள் நேரிடுகின்றன
விழிகள் பருகியது
காதலை

மிரள்ச்சியில் இருந்து
மீள மறுத்த மனதை
மீட்க்க முயன்றேன்
ஒரு யுத்தம் நடத்தியது
நினைவுகள்

கனவுகளின் ஊர்வலத்தில்
தினம் அவள் தரிசனம்
தரிகெட்டே திரிந்தேன்
தடுமாறிய வாழ்கையுடன்
அவள் கால்தடங்கள்
தேடி…..

22 மே, 2010

மழையின் சிநேகிதிக்கு

உன்னை விட்டு
உயரத்தில் இருப்பதால்
மேகம் அழுகிறது
ஜனிக்கிறது மழைத்துளிகள்


உன் கன்னத்தில்
முத்தம்மிடத்தானோ
வேகமாய் பயணிக்கின்றன
மழைத்துளிகள்


உன்னை முத்தம்மிட்டு
பட்டு தெரித்த
மழைத்துளிகள்
மோட்சம் பெற்று
மண்ணில் விழுந்தபோது
தேன்துளிகள்

18 மே, 2010

நான் மாறுகிறேன்

மாற்றம் என்பதே
மாற்ற முடியாத
ஒன்றாய் இருப்பதால்
மனமாற்றம் தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடுகிறது


மனமாற்றம் என்பது
எதற்காக
எதை நோக்கி
இவை சிந்திக்கப்பட
வேண்டியவை


நான் என்பது
அறிவா?
ஆன்மாவா?


மாற்றம் என்பது
அறிவிற்கா?
ஆன்மாவிற்கா?


நான் என்ற மாயையில்
துழையும் பொழுது
முதலில் தேடபட வேண்டியது
நான் யார் என்பதே
பின்னரே தெரிய வரும்
மாற்றம் பெறுவது
அறிவா?
ஆன்மாவா?


அறிவின்
தேடல் ஆதாயங்கள்
ஆன்மாவின்
தேடல் அன்பு


அறிவின்
தேடல் படபடப்பு
ஆன்மாவின்
தேடல் அறவனைப்பு


அறிவின்
தேடல் காரணங்கள்
ஆன்மாவின்
தேடல் மன்னிப்பு


அன்பும்
அறவனைப்பும்
மன்னிப்பும்
நிலையானது
மாற்றம்மில்லாதது


எண்ணங்களும்
செயல்களும்
அறிவை சார்ந்தது
நிலையில்லாதது
மாற்றம் உடையது


எண்ணங்களின் மாற்றத்தால்
செயல்கள் மாறுவதால்
நான் மாறுகிறேன் என்றால்
ஆன்மாவின் நிலை என்ன ?

25 மார்ச், 2010

சில கிறுக்கல்கள்

நீ
துவைத்த இதயத்தில்
நீங்கவில்லை
உன் நினைவுகளின்
கறைகள்
-------------------------------------------------------------
அவள்
என் வாழ்வை
அள்ளி சென்ற
ஆழி பேரலை
------------------------------------------------------------


நிலாவைத்தான்
வீட்டுக்கு
அழைத்துவந்தேன்
அது தேய்பிறையானதால்
அம்மாவாசையானது வாழ்வு


-----------------------------------------------------------


சுமைத்தாங்கி
கற்களுக்கு
சுமைகள் பாரம்மில்லை
உன் நினைவுகள்
சுமக்கும் இதயத்திற்க்கு
வலிகள் தெரிவதில்லை

3 மார்ச், 2010

ஆடை

நான் விரும்பி
வாங்கிய ஆடை
சில நாள் அணிந்தேன்
அழகாய்தான் இருந்தது
அறிந்தேன் பிறகு
அது என்
மானம் காக்கவில்லையென்று


அணிய வெறுத்தேன்
அந்த ஆடை துறந்தேன்
குளிரும்
வெப்பமும்
மேனியை வருத்தியது
கிடந்த போர்வைக்குள்
என்னை ஒளித்து
தலையை தூக்கி
வெளியே பார்த்தேன்


போர்வையிலே
ஆயிரம் ஓட்டை


துறந்த ஆடையை
திரும்பி பார்த்தேன்
சாயம் பாதி வெளுத்திருந்தது……

24 ஜனவரி, 2010

கண்கள் பேசிய கவிதை எங்கே

கண்ணின் மணி
நின் கண் கண்ட
கதை கூறவோ
நான் கொண்ட
துயர் கூறவோ

உன் உதடுகள்
புன்னகை பூத்தாலும்
கண்களில் ஏனடி
கண்ணீர் பூ

காதல் சொல்லிய
விழிகளில்
இன்று
வலிகள் மட்டும் ஏனடி

கவிதை பேசிய
கண்களில்
இன்று
கலக்கம் மட்டும் ஏனடி

உன்
கண்கள் சொல்லும்
கவிதை கேட்க
காத்திருப்பேன்
ஒரு அயுள் நானடி

இனியவளே என்று
பூக்கும்
உன் கண்களில்
புன்னகை
பூ

20 ஜனவரி, 2010

சில கிறுக்கல்கள்

என் நினைவுகளை
வடம் பிடித்து
இழுத்து சென்றாலும்
அது தேராய்
துடங்கிய இடத்திற்க்கு
வந்துவிடுகிறது
உன்னை நினைக்க
-------------------------------------
உன்னை
வேண்டாம் என்று
சொன்ன பின்னும்
மனம் மட்டும்
மறுக்கிறது
உன் நினைவுகளை
வேண்டாம்
என்று சொல்லுவதற்க்கு
---------------------------------------
ஒரு
முறை
முத்தமிட்டாய்
உயிர்பெற்றது
என் காதல்
மருமுறை
முத்தமிடு
மரித்துப்போகட்டும்
என் காதல்
--------------------------------------
என் மேல்
வெறுப்போடு
நீ
உன் மேல்
விருப்போடு
நான்
கடந்த காலம்
தந்த காயத்தின்
ரணங்கள்
இதயத்தில்
வலித்தாலும்
நீ
தந்த
அவமானங்கள்
வேதனையை தந்தாலும்
ஏனோ உன்னை
வெறுக்க முடியவில்லை
நீ
என்னை வெறுப்பதுபோல்

18 ஜனவரி, 2010

மரம்கொத்தி

மரமாய்
என் இதயம்
மருத்த பின்னும்
நீ
மரம்கொத்தி பறவையாய்
கொத்தி குடைகிறாய்
என் இதயத்தை

7 ஜனவரி, 2010

தேவதை

தேவதைகளிடம்
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்

நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......

6 ஜனவரி, 2010

காலம்

இன்று
உனக்கு
நான்
இறந்தகாலம்
ஆனால்
எனக்கு
நீ என்றுமே
வசந்தகாலம்......

நீ
இறந்தகாலம் கடந்தாலும்
எதிர்காலம் அறியாவிடினும்
நிகழ்காலத்தில்
உன் நிழல்
நான்.......