31 ஜனவரி, 2011

சின்ன சின்ன கிறுக்கல்கள்

காற்றின் தாளங்களுக்கு
உன் துப்பட்டா நடனத்தின்
ரசிகன் நான்
----------------------------------------------------------------------------------------------
பகலின் பரபரப்பு
இரவின் மௌனம்
மாறி மாறி வந்தாலும்
மாறாததும்
மறையாததும்
உன் நினைவுகள்
----------------------------------------------------------------------------------------------
அழகான ஓவியங்கள்
உன் கண்கள்
அதில் கவிதைகளாய்
உன் கண் மை
----------------------------------------------------------------------------------------------
கொக்கின்
ஒற்றை கால் தவம்
மீனுக்காக
என் பேருந்துநிறுத்த
தவங்கள் எல்லாமே
உன் கடைக்கண் பார்வைக்காக
----------------------------------------------------------------------------------------------
என் வார்த்தை
தவங்களின்
வரம் நீ
கவிதைகளாக
----------------------------------------------------------------------------------------------
புத்தாடை பொழிவுடன்
நம் காதல்
கந்தல்லாடையாக
நான்
----------------------------------------------------------------------------------------------
நான்
பார்க்கும் பொழுதெல்லாம்
அழகின் கர்வம்
உன்னை பற்றிக்கொள்ளுகின்றன
----------------------------------------------------------------------------------------------
வனங்கள் அழிவதால்
மழைப் பொழிவதில்லை
மனங்கள் முறிவதால்
உறவுகள் நிலைப்பதில்லை

16 ஜனவரி, 2011

என் இயலாமைகள்

இசைக்க நினைத்தேன்
விரிசலுடன் என் புல்லாங்குழல்
மீட்ட நினைத்தேன்
இழைகளில்லாமல் என் யாழ்
வாசிக்க நினைத்தேன்
வெறும் கூச்சல்களாய் என் குரல்
எழுத நினைத்தேன்
அர்த்தங்களில்லாமல் என் வார்த்தைகள்
இடருகளாய் என் இயலாமைகள்
வலியோடு பாதங்கள்
பயணங்கள் தொடர்கின்றன
முடியும் என்ற மனத்துடன்
அனுபவங்களை சுமந்து......