இரவு குளம் நான்
முழு நிலா நீ
என்னில் வழிந்தோடும்
பிம்பமாய்
நினைவுகள்
முழு நிலா நீ
என்னில் வழிந்தோடும்
பிம்பமாய்
நினைவுகள்
முடியாத ஓவியம் நான்
தூரிகையில் வண்ணம் நீ
வண்ணத்து குப்பியில்
அடைந்திருக்கும்
நினைவுகள்
தூரிகையில் வண்ணம் நீ
வண்ணத்து குப்பியில்
அடைந்திருக்கும்
நினைவுகள்
திறந்த சாளரம் நான்
திரைசீலையாய் நீ
பேசும் தென்றலாக
நினைவுகள்
திரைசீலையாய் நீ
பேசும் தென்றலாக
நினைவுகள்
கை விரல்கள் நான்
வண்ணத்து பூச்சி நீ
விரல் ஒட்டிய வண்ணங்களாய்
நினைவுகள்
வண்ணத்து பூச்சி நீ
விரல் ஒட்டிய வண்ணங்களாய்
நினைவுகள்
அகண்ட வானம் நான்
என்னை கிழிக்கும் மின்னல் நீ
வந்து போகும் ஒளியாய்
நினைவுகள்
என்னை கிழிக்கும் மின்னல் நீ
வந்து போகும் ஒளியாய்
நினைவுகள்
தேநீர் கோப்பை நான்
பருகும் இதழ்கள் நீ
சூடான தேநீர்
நினைவுகள்
பருகும் இதழ்கள் நீ
சூடான தேநீர்
நினைவுகள்
புத்தகம் நான்
கவிதை நீ
வாசிப்புகளாய்
நினைவுகள்
கவிதை நீ
வாசிப்புகளாய்
நினைவுகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக