15 ஆகஸ்ட், 2007

வரம் வேண்டும் தேவதையே!

சருகுகள்
காற்றில் சுழல்வதுப்போல்
சிரிப்பினால்
நீ என்னை
சுழல்ல விட்டாய்

சிறகுகள்
தந்து பறக்கவிட்டு
பின்பு
சிறைகளில் என்னை
நீ அடைத்தாய்

சிலுவையை
கூட சுமந்திடலாம்
காதல்
தந்த ரணங்களின்
வலிகள் சுமப்பதற்க்கு

இரவுகள்
மெல்ல விடிந்திடுமே
இருக்கங்கள்
என்று உடையும்
இரக்கம் பிறப்பதற்க்கு

கவிதை
வரிகளின் ஆழத்தில்
காதல்
வலிகளின் வேதனை
நீ அறிவாய்

தேவதை
போல வந்தவளே
காதல்
வரங்களை என்று
நீ தருவாய்....................

1 ஆகஸ்ட், 2007

காதலின் அடுத்தப் பக்கம்

ஒரு மகள் தான் விரும்பியவுடன் வாழ விரும்பி தன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாள். அந்த பெற்றோரை நினைத்து என்னுள் எழுந்த கிறுக்கல்கள் இவை :


நீ
படித்தாண்டினாய்
இடித்தாங்க
இதயங்களுடன்
இழிந்துப்போனார்கள்
உன் பெற்றோர்கள்.........

---------------------------------------------------------------

உன்னை
சுமந்தப் பொழுது
பாரம் தெரியாதவளுக்கு
ஊரார் உமிழ்ந்தப் பொழுது
சுமக்க முடியவில்லை
வேதனையின் பாரத்தை.........

---------------------------------------------------------------
அன்று
உன் தேவைகள்
அறிந்து சேவைகள்
செய்தார் உன் தந்தை
இன்று
கூனிக்குறுகி நின்றார்
துளிக் கூட நினைக்கவில்லை
அதை உன் சிந்தை......

4 ஜூலை, 2007

கண்ணாடிப்பூக்கள்

ஒப்பனை
அலங்காரங்களுடன்
கவர்ச்சியாய் புன்னகைத்து
கடைத் தெருக்களில்
வருபவர்களை
சுண்டி இழுத்தாலும்
வாசம் தருமா
இந்த கண்ணாடிப்பூக்கள்

30 ஜூன், 2007

பிரிவு

பூக்களை பிரிந்த
பூஞ்செடிகள்
இலையுதிர்கால
மரங்கள்
ஊதாத
புல்லாங்குழல்
மீட்டாத
வீணை
முடிவு பெறாத
ஓவியம்
நிலா இல்லாத
அம்மாவாசை வானம்
நீர் இல்லா
நதி தடங்கள்
வானம் பார்த்த
விவசாய பூமி
தாய் பசுவை
தேடும் கன்றுக்குட்டி
வேலைக்கு சென்ற
தாயைத் தேடும் குழந்தை
பிறந்த குழந்தையை
தேடும் தாய்
இதை போல
நீயில்லாத போது
நானும்........

25 ஜூன், 2007

உணர்வுகள்

பிறர் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள வேண்டும்
மனிதர்கள்
இல்லையென்றால்
உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகளால் காயம்படும்
உள்ளங்கள்!

மெழுகுவர்த்தி

எரியும் மெழுகுவர்த்தி
என் வாழ்க்கை
அதில்
உயிர்க்கும் ஒளி
உன் மேல்லான
என் காதல் !

அதை
காத்து நிற்பாயா
இல்லை
ஊதி அனைப்பாயா
என்னவளே
அது உன் கையில் !

23 ஜூன், 2007

என்றும் இளமையாய்

காதலே!
இறைவனிடம்
எப்படி வேண்டினாய் ?
உனக்கு மட்டும்
இப்படி ஒரு வரம்
நீ மட்டும்
என்றும் இளமையாய்....

17 ஜூன், 2007

வீட்டு பணிப்பெண்

ஏழையா பிறந்ததாள
கஞ்சித் தண்ணி வழித்தேடி
காது கழுத்து நகைய
கழட்டிக் கொடுத்து
கந்து வட்டி கடன் வாங்கி
எஜெண்டுக்கு மொத்தமா அழுது

வீட்டு வேலை
விசா வாங்கி
விமானம் ஏறி
வெளிநாடு வந்த பெண்ணே

மாடுகள ஓட்டிப்போகும்
மாட்டுக்காரன் போல் ஒருத்தன்
பெண்ணே ஒன்ன
கூட்டிப்போக வந்தான
இல்ல
ஓட்டிப்போக வந்தான

நகரத்து தெருவிலே
அழகான கட்டிடம்
கட்டிடம் உள்ளார
பெண் இவள
விற்க்கும் இடம்

மந்தையா ஒரு அறைக்குள்ள
அடைத்திருந்த பெண்களோட
மந்தையோடு மந்தையா
நீ மாட்டிக் கொண்ட மாயம் என்ன

வீட்டு வேலைக்கு
ஆள் தேடி வந்த மக்க
மாட்டு சந்தையில
மாடு தேடி வாங்குவதுப்போல
உன்ன வாங்க வருவாக
நீ விலை போன
சோறு உண்டு
இல்லாட்டி
ஒரு வேளைக்கு
ரொட்டித் துண்டு

தரகு பேசி
வாங்கிப் போவாக
தங்கம் உன்ன
உன் தலையெழுத்து
நல்லா இருந்தா
நல்லவங்க வீடு போவ
உன் நேரம்
நல்லா இல்லாட்டி
நரகத்துக்கு நீ போவ

பெண்ணே நீ
எந்த வீடு போனாலும்
செக்கு மாடா சுழழுனும்
நீ அடிமாடா வேலை செஞ்சாலும்
உனக்கு இருபது தினார் சம்பளம்

நீ பொத்தி பொத்தி
காத்த மானத்த
பொத்தல் போட
உன்ன சுத்தி சுத்தி
சில கழுகுக வட்டமிடும்

அந்த வட்டத்துல சிக்கிடினா
நீ சிதஞ்சி போய்டுவ
வாழ்வு தேடி வந்த பெண்ணே
நீ வாழ்க்கைய துழைச்சிடுவ

வீட்டு வேலைத் தேடி
வந்த மக்க
கதை சொன்னேன்
காது கொடுத்து கேட்க்கோ
கருத்திருந்தா
ஊருலேயே நீ பிழைக்க
வழி பார்த்துக்கோ

12 ஜூன், 2007

கவிதையே !

நான் என்றும்
வாசிக்க விரும்புவது
உன் இதழ்கள் என்னும்
இரண்டடி கவிதையைத் தான்....

10 ஜூன், 2007

எதைத் தேடி

பொழுதுகள் விடிகின்றன
இரவுகள் கடக்கின்றன
எதையும் அறியாமல் மனம்
தேடிக்கொண்டே இருக்கின்றன
வெயில் மழையோடு
வந்த வானவில்லின் வர்ணங்களை
உச்சிப்பொழுது
தார் சாலை கானல்களை
மாயையின் மயக்கத்தில்
நிஜங்கள் மறந்தப்பொழுது
நிகழ்வுகள் எல்லாம் கனவுகளாய்
நிழல்களில் நிஜம் தேடி
நிம்மதியின் விலாசங்கள்
மறக்கடிக்கப்பட்டு
அலைகிறது மனது
எதைத் தேடி ?

29 மே, 2007

சுயம்

என் சுயம் எதுவோ
அதை வெளிக்காட்ட சொன்னாய்
சில நாள் மட்டும்
நடித்து ஏமாத்தாமல்
உள்ளே உள்ளவனின்
சுயரூபம் கேட்டாய்

எனக்குள்ளே
நீ பயணம் செய்தால்
என் சுயம் உனக்கு புரியும்
செயல்கள் கண்ணாடிகளாய்
என் சுய பிம்பங்களை பிரதிப்பலித்தாலும்
அது மாயயையோ என்று
உன் மனம் குழம்பத்தான் செய்யும்

உன்னை சுட்டெரிக்கும்
சூரியன் இல்லை
என் சுயம்
உன் துயரங்களை
சுட்டெரிக்க நினைக்கிறது
என் சுயம்

உன்னை உட்க்கொண்டு
வளர நினைக்கவில்லை
என் சுயம்
கொடியே நீ வளர
என்னை பற்றி பிடிக்க சொல்கிறது
என் சுயம்

உன்னை வதைத்து
இன்பம் தேடவில்லை
என் சுயம்
உன்னில் உள்ள இன்பங்களை
உனக்காய் தேடிப்பிடிக்கிறது
என் சுயம்

என்னை விட்டு
தொலைவில் இருந்தாலும்
துழையாத உன் நினைவுகளுடன்
வாழ்கிறது என் சுயம் !

27 மார்ச், 2007

நேற்றைய கனவுகள்

சென்ற இரவின்
நேற்றைய கனவுகளின் ரேகைகள்
மனமெல்லாம் தடம் பதித்திட
இந்த விடிந்த பொழுதில்
வேலையில் அமர்ந்தாலும்
ஏனோ மனம்
விடிந்ததை சபிக்கிறது

போராட்டம் என்றால்
கலவரம் பேர்யிரைச்சல்
எல்லாம் இருக்குமே
இந்த மெளன போராட்டத்தில்
கலவரங்கள் இல்லை
பேர்யிரைச்சல் இல்லை
ஆனால்
ஒரு பூவின்
புரட்சி வெடிகளில்
ஆங்காங்கே சிதறிய உள்ளத்தில்
எங்கும் இன்ப ரணங்கள் !

13 மார்ச், 2007

தெரு விளக்கு

நீ ஒருத்தி
வருவதற்க்கு
நித்தம் நித்தம்
காத்திருந்தேன்

நெருப்பத்தான்
இமையாக்கி
நெடுநேரம்
பாத்திருந்தேன்

ரோட்டோரம்
விளக்கு கம்பம்
ஒத்தையா நிப்பதுப்போல
ஒத்தையா நின்னுயிருந்தேன்
ஒத்த பார்வை பாப்பன்னுட்டு


ஒத்தயடி பாதையில
ஒய்யாரம நடந்து வந்த
நினைக்கல நானும்
ஒரத்துல நின்னவன
பாக்கமத்தான் போவனுட்டு

ஒன் ஒத்த ஜடை
பூப்போல
ஒத்த மனசுக்குள்ள
ஒரத்துல இடம் கேட்டேன்

ஒரு நாளேனும்
ஒன் மனசு மாறிடத்தான்
இரவெல்லாம் வேண்டிக்கிட்டு
சாமிக்கிட்ட வரம் கேட்டேன்

வெட்டவெளி
புள்ளு தர
போல் இருந்த
என் மனச

ஏர் எடுத்து
உளுததுப் போல
நீ வந்து
உளுதுப்புட்ட

சுட்டு வச்ச
மன் பானை
போல் இருந்த
என் மனச

சுத்தி போல
உன் பேச்சால
சுக்கு நூறா
உடச்சுப்புட்ட

கத்திப் போல
உன் வார்த்தையால
கத்தி நீ பேசிப்புட்ட

பொத்தி வச்ச காதல
கடைசியில நீ
புரிஞ்சிக்காம போய்யிப்புட்ட

நீ
பிரிஞ்சிப் போனாலும்
என்ன
மறந்துப் போனாலும்

இந்த
விளக்கு கம்பம் போல
நீ போகும் பாதைக்கு
ஒளிக் கொடுப்பேன்
ஒன் நினைவால
நான் இருப்பேன்....

4 மார்ச், 2007

பருத்திவீரன்

நல்ல திரைப்படங்கள் காண்பது என்பதே மிகவும் அறிதான இந்த காலத்தில் ஒரு திரைப்படம் மனதில் வலியை தந்துவிட்டுது. இந்த படம் எற்படுத்திய தாக்கம் என் இந்த கிருக்கல்.


விதியினை மிஞ்ச யாருமில்லை
வினை விதைத்தவன் வினையருப்பான்
இவள் என்ன பாவம் செய்தாள்
யாருடைய வினை இவளை அருத்தது ?

அவள் அசைப்பட்டதெல்லம்
விரும்பியவனுடன் மணக்கோலம்
விதி அவளுக்கு
எழுதிவிட்டது மரண ஓலம்

முத்தழகி என்ற கோலம்
காமுகர்களால் ஆனது அலங்கோலம்

கையவனை காதலித்து
மனிதனாய் மாற்றி
கைப்பிடிக்கும் நேரம் பார்த்து
கையவர்களால் கற்பு
சூரையாடப்பட்டு
தரையில் சாய்ந்த சித்திரமே !

ஒரு சண்டியனை திருத்த
உயிர் துரந்த உத்தமியே !

நீ மரண படுக்கையில்
மொழிந்த வரிகள்
எல்லா சண்டியருக்கும்
வேத வரிகள்

பெண்னை போகமாய்
பார்த்த எல்ல மனிதருக்கும்
நீ ஒரு போதி மரம் !

சாதி தீயில் எரிந்தாலும்
குறையாது முத்தழகி என்ற
தங்கத்தின் தரம் !

மனதை பாதித்த படம்
உள்ளத்தை வருத்திய படம்
பருத்திவீரன் திரைப்படம்

கண்ணகி நீதிக் கேட்டு
மதுரையை எரித்தால்
அமீரின் பருத்தியூர் முத்தழகி
உனக்கு யார் நீதிக் கொடுப்பார் ?

16 பிப்ரவரி, 2007

உறவுகள்

ஒரு குறுகிய வட்டத்தில் சிக்குண்டு
சுயநல சிறையில் மாட்டிக் கொண்டு
பறவைகள் முறித்துக் கொண்ட சிறகுகள்
மனிதனின் இன்றைய உறவுகள்

ஆதாயங்கள் மட்டுமே தேடி
அதன் அடிப்படையில்
அமையப் பெறுகிறது
இன்றைய உறவுகள்

ஆதாயம் இல்லை என்றால்
அலட்சியமாய்
தூக்கி எறியப்படும்
இன்றைய உறவுகள்

உறவுக்காரன்
உள்ளே வந்தால்
உள்ளது போய்விடும் என்று
உறவுகளை துரத்திடும்
இன்றைய உறவுகள்

கூட பிறந்திருந்தால் கூட
பணம் இருந்தால் தான்
உறவுகள் கூடும்

உதவி தேடி
உள்ளே நுழைந்தால்
உறவுகளும் தூர ஓடும்

குடிசையில் வாழ்கிறது
உறவுகள் ஒற்றுமையாய்
கோடிஸ்வரன் வீட்டிலோ
புகைப்படங்களில் ஒற்றுமையாய்

தன் உறவுக்காரன்
தன்னை விட மேலே போய்விடுவானோ
என்று தவிக்கும் உறவுகள்
அவனை கீழே தள்ளி
சிரித்துப் பார்த்திடும்
இந்த பொறாமை உறவுகள்

பணம் இருக்கும் உறவு
எலனமாய் மதிக்கும்
இல்லாத உறவை

பிணமாய் படுத்த பின்னும்
தொடர்ந்திடுமோ பணம்
என்ற உறவை

மிருகம் கூட
நேசமாய்
தன் இனத்துடன்
கூடி வாழும்

மிருகத்திலும் கீழாய்
மனித இனம்
தன் உறவுகளுக்கே
குழி பறிக்கும்

13 பிப்ரவரி, 2007

காதலர் தினம்....

ஒரு நாள்
உலகம் முழுவதும்
காதலை கொண்டாடுகிறது
என்
ஒரு இதயம்
ஒரு அயுள் முழுவதும்
உன் காதலை கொண்டாடுகிறது

ஒரு நாள்
மட்டும் கொண்டாட வேண்டிய
விசயமா காதல் ?

வாழ்நாள் முழுவதும்
கொண்டாடத்தை கொடுப்பது
அல்லவா காதல் !

ஒரு நாள்
வாழ்த்து அட்டை தந்து
பரிசுகள் கொடுத்து
வெளியே சென்று
உணவு அருந்தி
ஒரு நாள்
மட்டும் உயிர்பது அல்ல காதல்

உள்ளத்தில்
அன்பு ஊற்றேடுத்து
வற்றாமல் வாழ்நாள் முழுவதும்
சீறி பாய்யும் ஜீவநதி காதல்

கால சுழச்சியில்
கலாச்சார மாற்றத்தில்
புதிதாய் ஒரு பழக்கம்
நம்மில் இல்லாத வழக்கம்
இந்த காதலர் தினம்

மேற்கத்திய நாடுகளும்
மேலை மக்களும்
தங்கள் பொருட்களை
எங்கும் எளிதாய் விற்று தீர்த்திட
எழை எளிய மக்களின்
பணத்தை உண்டு பார்த்திட
செய்த தந்திரம்
இந்த தினம்
காதலர் தினம்....

10 பிப்ரவரி, 2007

உந்தன் காதல்

உன்னால்
உன்டான காதல்
உள்ளுக்குள்ளே
பந்தாடுதே !

ஒரு வார்த்தை
உன்னிடம் பேச
உதடுகளும்
திண்டாடுதே !

உயிர் பறிக்கும்
உறவா காதல்
உறக்கம் வர
மறுக்கிறதே !

உள்ளுக்குள்ளே
விதையும் விதைத்தாய்
காதல் மரம்
வளர்கிறதே !

கனவுகளின்
கிடங்கா காதல்
கனவில் வாழ்வும்
கழிகிறதே !

வன்முறை
போராட்டமா காதல்
தடையை மீறி
நடக்கிறதே !

8 பிப்ரவரி, 2007

காதல் வைரஸ்

விழி வழி புகுந்து
புது வலி தந்து
உயிர் வரை பரவி
உணர்வுகளை துருவி
உறக்கம் பறித்து
கிறக்கம் கொடுத்து
இதயம் வேகமாய் திடுதிடுக்க
உதடுகள் தனியாய் முனுமுனுக்க
மனம் நினைவுகளுக்கு தாழ் போட
கால்கள் அதை தேடியே ஓட
மனம் பாரமாய் சுமக்கும்
இருந்தும் அது
காகிதமாய் பறக்கும்
மனத்துக்குள்ளே ஒரு மோதல்
சுகமாய் வலித்திடும் காதல் !

7 பிப்ரவரி, 2007

பெளர்ணமி திருவிழா

நட்சத்திரங்கள் கூடி
நிலாவுக்கு நலுங்கு வைத்தனர்
சந்தனமாய் குளிர்ந்தது நிலா
மேகங்கள் பன்னீர் தெளிக்க
மின்னல்களின் வானவேடிக்கை
இடியின் அதிர்வேட்டுக்களுடன்
வானவீதியெங்கும்
நிலா ஊர்வலம்
நில்லாமல் நடந்தது !

3 பிப்ரவரி, 2007

சின்னசின்ன கிறுக்கல்கள்

உன் கருவிழிகள்
நடத்திய போராட்டத்தில்
கலவரப்பட்டது என் இதயம்......
--------------------------------------------------------------
உன் இதழ்கள்
பூத்த ஒவ்வொரு பூவிலும்
பூத்தது என் உயிர்......
--------------------------------------------------------------
நானம் உன் முகத்தில்
பரவும் நேரத்தில்
நனைந்தது என் இதயம்
காதல் மழையில்.....
--------------------------------------------------------------
நான் எதைச் சொன்னாலும்
நீ ரசித்துவிட்டு
ரொம்பத்தான் என்று சொன்னபோது
ரொம்பியது என் மனது
உன் காதலில்.......
--------------------------------------------------------------

30 ஜனவரி, 2007

செத்து பிழைக்கிறேன்

ஒவ்வொரு நாளும்
உன் கனவுகள்
என் விழிகளில் வந்து
முள்ளாய் குத்தி
என்னை கொன்றது போதும்
கனவுகளில் வந்து போகிற
உனக்கு என்ன தெரியும்
வலியும் வேதனையும்
சிரித்துவிட்டு நீ சென்ற பிறகுதானே
நான் செத்து பிழைக்கிறேன்........

24 ஜனவரி, 2007

சிறகுகள்

உன் இமைகள்
என்ன பட்டாம்பூச்சியின் சிறகுகளா
அவை சிறகடிக்கும் பொழுதெல்லாம்
நான் சிறையிடப்படுகிறேன்...

கவிதையே

உன்னை பற்றி
எழுதிய வார்த்தைகளை
கவிதைகள் என்றனர்
ஒரு கவிதை
கவிதையாகத்தான் இருக்கும்
என்பதை தெரியாமல்......

நீ யார்

நீ
எரியும் நெருப்பா
இல்லை கொட்டும் மழையா
மழையாய் உந்தன் வார்த்தைகள்
என்னை நனைத்தாலும்
நெருப்பாய் உன் நினைவுகள்
என்னை சுடுகின்றன....

14 ஜனவரி, 2007

நமக்காய் ஒரு உலகம்

என்னை நீ நேசிக்கவும்
உன்னை நான் நேசிக்கவும்
உன்னை நானும்
என்னை நீயும் யோசிக்கவும்
நம்மில் அன்பை
ஒருவருக்கு ஒருவர் யாசிக்கவும்

நீ சிரிக்கும் பொழுது நான் சிரிக்கவும்
நான் வருந்தும் பொழுது நீ வருந்தவும்

நீ
எனக்குள் ஒருவளாய்
நான்
உனக்குள் ஒருவனாய்
நமக்காய் ஒரு உலகம்

அதில்
அன்பு மழையில் நீயும் நானும்
அனந்தம் நிறைந்து எங்கும் கானும்

சோதனை வந்தால் சோர்ந்துவிடாமலும்
சாதனை வந்தால் பெருமிதமில்லாமலும்

கையில் கொண்டது கொண்டு
இன்புற்று வாழும் வாழ்வு
நம்மால் முடிந்ததை
மற்றவருக்கு செய்யும் ஈவு

எளிமை நிறைந்த ஒரு வாழ்வு
மழலைச் செல்வங்களுடன்
மகிழ்வாய் ஒரு வாழ்வு

மரணம் நம்மைத் தொடும் வரை
நம்மில் மற்றவர்காய் நம் வாழ்வு

13 ஜனவரி, 2007

பொழிவாயோ மழையே

வரண்ட பூமியாய்
என் உள்ளம் இருக்க
வரமாய் வருவாயோ
மழையே !

காய்ந்த வனமாய்
இங்கு வாழ்வும் இருக்க
உயிர்பிக்க பொழிவாயோ
மழையே !

கருமேக நினைவுகள்
என்னை கடந்துச் சென்றாலும்
கருனைத் துளிகளைச் சிந்தாயோ
மழையே !

உலர்ந்த உதடுகள்
வாய் பிளந்து வான்ப்பார்க்க
தாகம் தீர்க்காயோ
மழையே !

உன் வருகைக்காக
இருளடைந்தது என் வானம்
என்று பொழிவாயோ
மழையே !

10 ஜனவரி, 2007

இரங்கற்பா

சதாம்

சில நூறுப்பேர்களை கொன்றதாய்
உனக்கு தூக்கு தண்டனைத் தந்தார்கள்
ஆறு லட்சம் பேர்களை கொன்றவர்கள்

தியாகத் திருநாளில்
உன்னை தூக்கில் ஏற்றியது
எண்ணைத் திருடர்களின் சதி
இனி
ஒவ்வொரு ஆண்டும்
நீ நினைவுக் கொள்ளப்படுவாய்
இந்த தியாகத் திருநாளில்
இது இறைவன்
உனக்கு எழுதிய விதி

உன்னை தூக்கிலிட்டதை
கொக்கரிக்கிறான்
அமெரிக்க ஜனாதிபதி
உலகத்தார் தூற்றலில்
குறுகுறுத்தன
அவர்களின் அரக்க மதி

ஒரு
வீரனாய் வாழ்ந்து
ஒரு
வீரனாய் மரணத்தை முத்தமிட்டாய்

கயிற்றை இருக்கி
உன் மூச்சை நிருத்தியவர்களால்
சரித்திரத்தில்
உன் பேச்சை நிருத்த முடியாது

மண்ணுக்குள் நீ புதைந்தாலும்
சரித்திரத்தில் நீ நிலைத்துவிட்டாய் !

9 ஜனவரி, 2007

உன் வருகை

என்னவளே !
என் வாழ்க்கையில்
உன் வருகை
என் இரவுகளை
கவிதைகளாக மொழி பெயர்கின்றன !

உன் மீதான என் காதல் (2)

உன் மீதான என் காதல்
இதை எப்படி சொல்லுவது
ஒரு
உண்மையான அன்பிற்க்கான ஏக்கமா ?
உன் நேசம் என்னில் ஏற்படுத்தியத் தாக்கமா ?
உடலின் ஹார்மோன்கள் உண்டாக்கிய ஊக்கமா ?
இல்லை இது
வாழ்க்கைத் துனை வேண்டும் என்ற நோக்கமா ?

எழுந்த கேள்விகளுக்கு
விடைத் தேடி
எண்ணங்கள் பயணித்தன
காரணங்களை மனம் தேடத் துடங்கின

கொஞ்சம் தாய்யன்பு
கொஞ்சம் நட்பு
கொஞ்சம் சகோதரத்துவம்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் பிள்ளைத்தனம்
கொஞ்சம் துள்ளல் மனம்

இதன் கலவையில்
ஒரு அன்பு மனம்
இதன் தாக்கம் தான்
என் காதல் என்று
விடையைத் தந்தது
என்னுள் உள்ள மனம் !

உன் மீதான என் காதல்

உன் மீதான என் காதல்
கண்டதும் வந்தது அல்ல
கண்ணீரில் முடியப் போவதும் அல்ல
ஒரு நிதானத்தில்
நிதானமாய் வந்தாலும்
நித்தியமாய்
நீடிக்கும்
உன் மீதான என் காதல்