ஒரு நாள்
அசம்பாவிதம் நடக்காமல்
பார்க்கத் தவரிய அரசு
ஆண்டு தோறும் போடுகிறது
ஜந்து அடுக்கு காவலும்
வரலாறு காணாத பாதுகாப்பும்
எல்லா பொது இடங்களிலும்
அசம்பாவிதங்களை தடுக்க
ஒரே ஒரு நாள்
அரசு கடமையை செய்ய தவறியது
ஒவ்வொறு ஆண்டும்
ஒரு நாளில் மட்டும்
அரசு மெல்ல விழிக்கிறது
பசுவுக்கு
நீதி சொன்ன நாடு
மசுதிக்கு
நீதி மறுக்கிறது
வாழ்க கூட்டு மனசாட்சி
வாழ்க மதசார்பின்மை