இலை உதிர் கால சருகுகள்
சலசலகின்றன இங்கும் அங்குமாய்
காற்றின் ஜதிகளுக்கு
சுழன்று ஆடுகின்றன சருகுகள்
மேலே பரப்பதுமாய்
கீழே விழுவதுமாய்
இருக்கின்றன
படபடக்கும் சருகுகளின்
ஓசைகளின் பதிவுகள்
காற்றில் கரைந்து மௌனமாகின்றன
குப்பையாய் எஞ்சி நிற்கின்றன சருகுகள்
இன்னொறு காற்றுக்காக