11 அக்டோபர், 2012

கண்ணீர் அஞ்சலி

உதிர்ந்த பூக்களுக்கு
உதிரப்போகும் பூவின்
கண்ணீர் அஞ்சலி

செடிகளுக்கு
பூக்கள் பாரம்மில்லை
செடியைவிட்டு
பூக்கள் உதிருவது
என்னவென்று கருதுவது ?

பூத்துக் குழுங்குவதும்
வாசம் வீசுவதும்
சொற்ப காலங்களாய்
இருந்தாலும்
நம் உறவுகள்
என்பதின் முடிவு
வெறும் சருகுகள்

செடியே
உன்னில் இருந்துதான்
வந்தோம்
உதிர்ந்த பின்
உனக்கே உரம்மாவோம்

கால கணக்குகளுடன்
நம் கதைகள் எழதப்பட்டாலும்
காலமானலும்
எங்கள் காலம் வரை
மனத்தில் உங்கள்
மணம் குறையாது.......

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்தனை வரிகள் அருமை...

மிகவும் பிடித்தவை :

/// பூத்துக் குழுங்குவதும்
வாசம் வீசுவதும்
சொற்ப காலங்களாய்
இருந்தாலும்
நம் உறவுகள்
என்பதின் முடிவு
வெறும் சருகுகள்///

Rafiq சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.தனபாலன்.