16 ஆகஸ்ட், 2014

யாசகம்


நீ நடத்தும் நாடகத்தின்
கதா பாத்திரம்
உன்னையே யாசிக்கும்
என் மனப்பாத்திரம்
இந்த தந்திர வாழ்க்கையின்
அர்த்தம் அரியாமல்
வேறும் இந்திராமாய்
நேரங்கள் கழிய
மிஞ்சுவது மரணம்
என்ற போதும்
கடிவாளம் இல்லாத
காட்டு குதிரை மனம்
ஓடி திரிந்து
அடுக்கி கொண்டுயிருக்கிறது
பாவ மூட்டைகளை
ஆசையில் திளைத்த மனம்
பசியால் யாசகம் கேட்கிறது
படைத்தவனை நோக்கி
பாவ மன்னிப்பும்
வாழ்க்கை சுச்சமத்தின் ஞானத்தையும்