30 டிசம்பர், 2009

கிறுக்கல்கள்

என் கிறுக்கல்கள்
அதிர்ஷ்டசாலிகள் தான்
நீ
என்னை வெறுத்தாலும்
என் கிறுக்கல்களை
நேசிக்கிறாய்……..

மௌனம்

கொலுசின்
மொழி கற்றுத்தந்தவளே
உன்னாலே
மௌனத்தை
மொழிபெயற்க்கிறேன்.....

24 டிசம்பர், 2009

கானலாய் போன காதல்

கானலாய் போன காதலை
கவிதையால் உயிர்தெழச் செய்ய
வார்த்தைகள் தேடி
வாசலில் நிற்கிறேன்

காதலை
பகடைக்காயாய் வைத்து
அரங்கேறிய விளையாட்டில்
வெட்டுபட்டது என்னவோ
நீயும் நானும் தான்

விளையாடிப் பார்த்தவர்கள்
ஓய்ந்துபோனார்கள்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
ஒடுங்கிபோனது என்னவோ
நீயும் நானும் தான்

என்னிடம்
காதல் மட்டுமே
இருந்திருந்தால்
என்றோ
உன்னிடம் சரண்ணாகிருப்பேன்

தன்மானத்தை
காதல் சுடும்போது
தன்மானம்
காதலை சுடுகிறது

மொத்தத்தில்
காதல்
என்னை
சுட்டுவிட்டது……..

15 டிசம்பர், 2009

உன்னை கண்ட தருணம்

உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்

இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்

உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்

பகல் இரவுகள் நானும்
பல கனவு கான்கிறேன்
பனி துளியிலும் நானே
பொன் முகத்தை தேடினேன்

கண்கள் இரண்டிலும் தானே
புது கவிதை படிக்கிறேன்
கைகள் பேசிய கதையை
நான் காற்றை கேட்கிறேன்

என்னை கடந்திட்ட நேரம்
இதயம் நின்று துடிக்குமே
ஆடை உரசிய உணர்வோ
உன்னை அனைக்க தோன்றுமே

இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்

உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்

என்னை கடந்த நீயும்
ஏன் திரும்பி பார்கிறாய்
ஓர பார்வையாலே நீயும்
என்னை உரசி பார்கிறாய்

காற்றில் அழைந்திடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்குதே
கால் தடங்களை கண்டு
மனம் பின் தொடருதே

எதுவரை இந்த பயணமோ
பாதியில் இது முடியுமோ
உதடுகள் உதிர்க்குமோ வார்த்தையை
உதிர்ந்து போகுமோ வாழ்கையும்

இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்

உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்