நான் விரும்பி
வாங்கிய ஆடை
சில நாள் அணிந்தேன்
அழகாய்தான் இருந்தது
அறிந்தேன் பிறகு
அது என்
மானம் காக்கவில்லையென்று
அணிய வெறுத்தேன்
அந்த ஆடை துறந்தேன்
குளிரும்
வெப்பமும்
மேனியை வருத்தியது
கிடந்த போர்வைக்குள்
என்னை ஒளித்து
தலையை தூக்கி
வெளியே பார்த்தேன்
போர்வையிலே
ஆயிரம் ஓட்டை
துறந்த ஆடையை
திரும்பி பார்த்தேன்
சாயம் பாதி வெளுத்திருந்தது……
1 கருத்து:
சில கிறுக்கல்கள் மனதை மாற்றும்...
ஒரு சறுக்கல் வாழ்க்கையை மாற்றும்...
கருத்துரையிடுக