14 ஜனவரி, 2007

நமக்காய் ஒரு உலகம்

என்னை நீ நேசிக்கவும்
உன்னை நான் நேசிக்கவும்
உன்னை நானும்
என்னை நீயும் யோசிக்கவும்
நம்மில் அன்பை
ஒருவருக்கு ஒருவர் யாசிக்கவும்

நீ சிரிக்கும் பொழுது நான் சிரிக்கவும்
நான் வருந்தும் பொழுது நீ வருந்தவும்

நீ
எனக்குள் ஒருவளாய்
நான்
உனக்குள் ஒருவனாய்
நமக்காய் ஒரு உலகம்

அதில்
அன்பு மழையில் நீயும் நானும்
அனந்தம் நிறைந்து எங்கும் கானும்

சோதனை வந்தால் சோர்ந்துவிடாமலும்
சாதனை வந்தால் பெருமிதமில்லாமலும்

கையில் கொண்டது கொண்டு
இன்புற்று வாழும் வாழ்வு
நம்மால் முடிந்ததை
மற்றவருக்கு செய்யும் ஈவு

எளிமை நிறைந்த ஒரு வாழ்வு
மழலைச் செல்வங்களுடன்
மகிழ்வாய் ஒரு வாழ்வு

மரணம் நம்மைத் தொடும் வரை
நம்மில் மற்றவர்காய் நம் வாழ்வு

3 கருத்துகள்:

Meerambikai சொன்னது…

அன்பு நண்பரே,

இல்லறத்தின் இலக்கணத்தை வெகு சில வரிகளில் துல்லியமாக விளக்கிவிட்டீர்.

தங்கள் சொல்நயம் மிகவும் அருமை.

அன்புடன்

ஆகிரா

Rafiq சொன்னது…

திரு ஆகிரா அவர்களே,

உங்கள் விமர்சனம் என்னுள் தன்நம்பிக்கையை வளர்க்கிறது. உங்கள் மேலான விமர்சனங்களுக்கு மிக்க நன்றி!

Yas சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.