நீ
எனக்கு பரிசளித்த
தூக்கம் தின்ற இரவுகள்
எத்தனை வன்மம் நிறைந்தது
கடக்க முடியாத அந்த
நீண்ட இரவுகள்
உன் சாபங்களின்
வண்ணங்கள்
காட்டு குதிரைகள்
பூட்டிய உன் ரதத்தின்
சக்கரங்களாய் ஓடி
அலைகிறது என் மனம்
கடல் விழுங்கும்
சூரியனாய் என் கண்கள்
கல்லறை தோட்ட பூக்களாய்
என் கனவுகள்
மதில் மேல் உளாவும்
கருப்பு பூனையாய் என் சிந்தனை
விட்டல் பூச்சியாய் நான்
என்னை கவர்ந்திழுக்கும் விளக்காய்
நீ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக