முன்னூறு நாட்கள் இருட்டறை பிரவேசம்
தொப்புள் கொடி வழியே தினம் என் சுவாசம்
அவள் உணவை கொடுத்து உயிரை வளர்த்தாள்
நான் வலியைக் கொடுத்து வெளியே வந்தேன்
அவள் கண்கள் இரண்டில் கண்ணீர் அருவி
என்னை ஈன்றவளுக்கு இன்னொரு பிறவி
தலைக்கீழாக பிறந்த என்னை
நேர் வழியில் நடக்க வைத்தாள்
தரணியிலே இவனும் ஒரு
மனிதன் என மதிக்க வைத்தாள்
இத்தனையும் செய்த உனக்கு
நான் என்ன செய்தேன்னம்மா ?
உலகத்தை உன் காலடியில் வைத்தாள் கூட
உன் சேவைக்கு ஈடாகுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக