ஒவ்வொரு ஆண்டும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நான் சுமந்துக்கொண்டு இருக்கும்
சுமையை இரக்க
உனக்காய் நான் காத்திருக்கிறேன்
பசி என்றால் என்ன
தெரியாதிருந்த எனக்கு
பசியை உணரவைக்கிறாய்
ஏழையின் துயரை
ஆழமாய் அறியவைக்கிறாய்
யாருக்கும் எதையும்
விட்டுக்கொடுக்காத என்னை
தியாகம் செய்ய
கற்றுக் கொடுக்கிறாய்
உணவை விட்டுக்கொடுத்தேன்
தண்ணீர் விட்டுக்கொடுத்தேன்
மெல்ல மெல்ல விட்டுக்கொடுக்க
ஞானத்தை பெற்றுக்கொடுக்கிறாய்
பேராசை தீயில்
உழண்ட மனதை
பெரும் போராட்டத்தின் பின்பும்
கட்டுப்படுத்த தவறி விழித்தப்பொழுது
என் மனத்திற்க்கு கடிவாளமிட்டு
என் மனித தன்மையை
திருப்பிக் கொடுக்கிறாய்
என் ஜம்புலன்களின்
வழியே மாசுபட்ட
என் உள்ளத்தை
திரைகளிட்டு
மறைத்துவைக்கிறாய்
பின்னே
அவன் கருணை கொண்டே
என் உள்ளத்தை
கழுவி சுத்தம் செய்கிறாய்
செல்வமும்
வறுமையும்
இருகோடுளாக
இணையாதிருக்க
ஜகாத் என்னும்
பாலத்தால்
இரண்டையும்
இணைத்துவைக்கிறாய்
வறுமையற்ற
சமுகம் காண
புதுப்புரட்சி செய்கிறாய்
கருணை ஊற்றை
தூர் எடுத்து
மனித மனத்தில்
மறுமலர்ச்சி காண்கிறாய்
மனத்தில் உண்டாகும்
வாதம் நீங்க
வேதம் தந்தாய்
மனிதனாய் வாழ
பயிற்ச்சி செய்ய
ஆண்டில் ஒரு முறை
மாதம் தந்தாய்
இறைவா எங்களுக்கு
ரமலான் மாதம் தந்தாய்
ரமலானே வருக
பாவம் கரைந்திட
அருள் மாரி
பொழிக!
1 கருத்து:
ஹாய், அஸ்ஸலாமு அலைக்கும்...
மிக நல்ல ஹைக்கூ, சிந்தனை மிகுந்த கவிதைகள்..
றமளான் ஒரு மைல் கல்....
வாழ்த்துக்கள்... தொடர்வோம்....
அன்புடன்
அபூ ஃபஹத்..
முடிஞ்சா இந்த blog படிங்க..
புடிச்சிருந்தா கண்டிப்பா கருத்துரை எழுதுங்க...
கருத்துரையிடுக