சென்ற இரவின்
நேற்றைய கனவுகளின் ரேகைகள்
மனமெல்லாம் தடம் பதித்திட
இந்த விடிந்த பொழுதில்
வேலையில் அமர்ந்தாலும்
ஏனோ மனம்
விடிந்ததை சபிக்கிறது
போராட்டம் என்றால்
கலவரம் பேர்யிரைச்சல்
எல்லாம் இருக்குமே
இந்த மெளன போராட்டத்தில்
கலவரங்கள் இல்லை
பேர்யிரைச்சல் இல்லை
ஆனால்
ஒரு பூவின்
புரட்சி வெடிகளில்
ஆங்காங்கே சிதறிய உள்ளத்தில்
எங்கும் இன்ப ரணங்கள் !
1 கருத்து:
புலம் பெயர்ந்து, சுயம் தொலைத்தோம்...பணம் படுத்தும் பாடு...
கருத்துரையிடுக