11 அக்டோபர், 2012

வரமாய் பிறந்தவளே !


தவங்கள் எல்லாம்
வரங்கள் பெறுவதில்லை
எங்கள் தவத்தின்
வரமாய் பிறந்தவளே !

உன் கருவறை
பயணம் முடிந்து
உலக பயணம்
இன்று துவக்கம்

என் பயணத்தோடு
உன்னை இணைத்து
செல்வது என்பது
எனக்குப் பிடிக்கும்

உன்
பிறை முகம்
பார்க்க விட்டாலும்
என்
பாசறை அகம்
புகுந்து விட்டாய்

உன்
அழுகை சத்தம்
கேடக்க விட்டாலும்
அடி
நெஞ்சை நித்தம்
நெகிழ வைத்தாய்

உன் பிறப்பு
உலகுக்கு சிறப்பு
சேர்க்கட்டும்

எல்லாம் வல்ல இறைவன்
உனக்கு என்றும்
துணையாய் இருக்கட்டும்

கருத்துகள் இல்லை: