கடினத்தோடு
கிழித்து எறியப்படுகிறது
என்னுடைய நாட்கள்
முகமூடி அணிந்த
மனிதர்களின் போலி சிரிப்புகளையும்
பின்னால் பேசும் புறங்களையும்
கடக்கின்ற மணித் துளிகளில்
நாகரிகப் போர்வையில்
சுயம் போட்டுக்கொள்ளுகின்றன
பொய் முகமூடிகளை
சுயநல மனிதர்களின்
நாவின் அசைவுகள்
சத்தியத்தை சாகடித்த வசவுகள்
இதில் நாட்கள் நகர நகர
தோய்க்கப்படுகிறது மனம்
நிதம் நிதம்
தேர்ச்சியடைகிறது ஞானம்
தினம் தினம்
தேவையின் நிற்பந்தங்களும்
தேடலின் தவிப்புகளும்
விலங்குகளாக
பின்னிப் பினைந்து கிடக்க
நாட்கள் பயணிக்கின்றன
வலுவான நாளைய
எதிர்பார்ப்புடன்
புதிய புதிர்களுடன்
தினம் தினம்
பூக்கிறது
புதிய நாள் ஒன்று
விடை தேடியே
விழுகின்ற
அன்றையப் பொழுதுகள்
மயான அமைதியுடன்
கரும் இரவுகளில்
சொல்லப்படாத மௌனத்துடன்
வானத்தில் அந்த நிலாவும்
சுகமான நினைவுகளின்
சுமைகளில்
என் மனமும்
விடியலின்
தொடக்கத்துக்காக
இரவின் முடிவு காத்திருக்கிறது
நானும் காத்திருக்கிறேன்
கடினத்துடன் கிழித்து எறிய
அடுத்த நாளை……
2 கருத்துகள்:
//நாகரிகப் போர்வையில்
சுயம் போட்டுக்கொள்ளுகின்றன
பொய் முகமூடிகளை//
அருமை..வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சரவணன் அவர்களே!
கருத்துரையிடுக